Sunday, August 16, 2009
காதலிகளுக்காக ..!!
ஓர் இரவு
பௌர்ணமி நிலவு
என் அறைக்குள்
இரு பெண்களுக்குள் சண்டை !
யார் முதலில் என்னை
தழுவுவது என்று..!!
இருவருவமே என் அருமை காதலிகள்,
எனக்கு இன்பமூட்டும் கண்மணிகள்.
இருவரையும் தேற்ற முயன்றேன்.
முயலவில்லை !
ஒருத்தி என்னை அணைக்க முயன்ற வேளையிலே,
ஆவேசமாய் இன்னொருத்தி என்னை கட்டி முத்தமழை பொழிந்தாள்..!!
யார் இந்த அழகிகள்..??
அணைக்க முயன்றவள் "தூக்கம்" மங்கை !
முத்தமிட்டவள் "கவிதை" மங்கை !!
அவளை வடித்தேன்
இங்கே எழுத்துக்களாக..!!
-[JB]-
Subscribe to:
Post Comments (Atom)
நித்திரை தேவியின்
ReplyDeleteபழி வாங்கும் படலம்
உனது விழிகள் வடித்திருக்கும்
மறுநாள்!
பரவசத்திருக்கு மட்டும் தான்
இடமோ
தங்களின் இந்த
தமிழ் துளிகளில்?
:)