சிரிப்பு
உன்
சிரிப்பில்
வந்த இசையை..!
என் பேனா
எப்படி
மொழி பெயர்க்கும் ??
படைப்பு
கவிதை எழுத முயன்றேன்,
இயலவில்லை :-(
உன்
பெயர் எழுதினேன்
ஓர் வார்த்தையில்
காவியம்..!!
யார் நீ
மாதா,
பிதா,
குரு,
தெய்வம்,
....அப்போது எல்லாமாகிய
நீ ???
திருட்டு
காணாமல் போனவர்களை பற்றிய அறிவுப்பு,
அவன் ஏங்கினான்
தொலைந்த இதயத்தோடு..!!
இயற்பியல்
மறக்க வேண்டியது மறக்காமல் போவதும்,
மறக்கக்கூடாது மறந்து போவதும்,
என்ன நியூட்டனின் நாலாவது விதியா ??
No comments:
Post a Comment