Friday, September 14, 2012

நாணயம் - நான் போகிறேன் !!

பல்லவி :
நான்  போகிறேன்  மேலே  மேலே !
பூலோகமே  காலின்  கிழே
விண்மீன்களின்  கூட்டம் என்  மேலே !!

பூ  வாளியின்  நீரைப்  போலே !
நீ  சிந்தினாய்   எந்தன்  மேலே
நான்  பூக்கிறேன்  பன்னீர்   பூப்போலே !!

தடுமாறிப்  போனேன்  அன்றே, உன்னைப்  பார்த்த  நேரம்
அடையாளம்  இல்லா  ஒன்றை, கண்டேன்  நெஞ்சின்  ஓரம்!
ஏன்  உன்னைப்  பார்த்தேன்?  என்றே உள்ளம்  கேள்வி  கேட்கும்
ஆனாலும் நெஞ்சம்  அந்த  நேரத்தை நேசிக்கும் !!

சரணம்  1

கண்ணாடி  முன்னே  நின்றே  தனியாக  நான்  பேச
யாரேனும்  ஜன்னல்  தாண்டிப்  பார்த்தால்  ஐயோ !
உள்  பக்கம்  தாழ்ப்பாள்  போட்டும்  அறையினுள் நீ  வந்தாய்
கை  நீட்டி  தொட்டுப்  பார்த்தேன்  காற்றை  ஐயோ !!

என்  வீட்டில்  நீயும்  வந்து  சேரும்  காலம்  எக்காலம்
பூ  மாலை  செய்தே வாடுதே !
என்  மெத்தை  தேடும்  போர்வை,  யாவும்  சேலை  ஆகாதோ 
வாராதோ  அந்நாளும்   இன்றே  ஹான் !!

சரணம்  2

என்  தூக்கம்  வேண்டும்  என்றாய்  தர  மாட்டேன்  என்றேனே 
கனவென்னும்  கள்ள  சாவி  கொண்டே  வந்தாய் !
வார்த்தைகள்  தேடி  தேடி  நான்  பேசி  பார்த்தேனே
மௌனத்தில்  பேசும்  வித்தை  நீதான்  தந்தாய் !!


அன்றாடம்  போகும்  பாதை  யாவும்  இன்று  மாற்றங்கள்
காணாமல்  போனேன்  பாதியில் !
நீ  வந்து  என்னை  மீட்டு  செல்வாய்  என்று  இங்கேயே
கால்  நோக  கால்  நோக  நின்றேன் !!
--------------------------------------------------------------------------------------------------------



மிக அருமையான பாடல் - என்னைப் பறக்கச் செய்யும் வரிகள்..!!

அன்புடன் - பாலாஜி !!

Sunday, December 5, 2010

தேவதை

அழகே  ஒரு  வடிவம் 
தாங்கி  வந்தால் ,
அதற்கு 
எந்த  ஆபரணத்தை 
கொண்டு 
அழகு  செய்ய  முடியும்?


இந்த
பொன் நகை
உன்னுடைய
புன்னகைக்குத் தான்
ஈடாகுமா ?

Wednesday, March 3, 2010

ஸ்ரீ அருணகிரிநாதரின் திருப்புகழ் - பாடல் 6 முத்தைத்தரு (நூல்)

......... பாடல் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே

- முருகா -


(குறிப்பு : http://www.kaumaram.com/thiru_uni/tpun0006.html)

Wednesday, February 3, 2010

எம்மை கவர்ந்த மூன்றெழுத்துக்கள்

தமிழ்
அம்மா
அப்பா
உயிர்
கல்வி
பண்பு
காதல்
பணம்
உறவு
உணவு
பாடல்
ஆட்சி
மீட்சி
புகழ்
அன்பு
பாசம்
நேசம்
நட்பு
தேடல்
நன்றி
கனவு
ஈரம்
கவிதை!

Sunday, November 29, 2009

..உலகிற்கு அமைதி வேண்டி..




இந்த உலகம் எதற்கு ?
பால் பொழியும் வெண்ணிலவும்,
சுட்டெரிக்கும் சூரியனும்,
மின்னும் நட்சத்திரமும்
யாருக்காகப் படைக்கப்பட்டது ?
மனிதர் என்ற ஒப்பற்ற ஜீவன்கள் இன்பமாக வாழத் தானே!
பின்பு ஏன் இந்த பிளவு படுத்தும் எல்லை கோடுகள்?
உடைந்து போகின்றனவே இதயங்கள்,
யார் இதை தைப்பது?


கண்ணீர், காயம், இரத்தம், வலி எல்லோருக்கும் ஒன்று தானே.
எல்லாரும் வந்தது கருவறையில் இருந்துதானே ?
அவர் வலி கண்டு இவர் சிரிப்பது ஏன்?
அவர் வலி என் வலி என்று எண்ணி
இவர் கண்கள் ஈரமாக வேண்டாமா?


இதயங்களுக்குள் இடைவெளி வேண்டாம், தீவிரவாதம் வேண்டாம்,
சாதி, மதம், மொழி, கொள்கை என்ற பெயர்களில் வேற்றுமையைப் புகுத்தாதீர்கள்.
நாட்களை மகிழ்ச்சியாக்கி, அன்பும் பாசமும் கொண்டு வாழ்கையை வாழுங்கள்.
மக்களை உயர்வாக எண்ணி அன்பு பாராட்டுங்கள்.


எதிர்கால சந்ததியினர்களுக்கு போர், தீவிரவாதம் என்ற சொற்களை
அன்பும், பாசமும் வென்று விட்டது என்ற புதியதோர் பாடம் புகட்டுங்கள்.

Friday, September 4, 2009

தமிழ் எத்தனை அழகு..!!

உன் பெயர்
எழுதும்
ஒவ்வொரு
முறையும்
எனக்குள்
வியப்பு..!!

Sunday, August 30, 2009

உயிரை தொலைத்தேன் - பாடல் வரிகள்

உயிரை தொலைத்தேன் அது உன்னில் நானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ

மீண்டும் உன்னை காணும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தால் ... ஆ ஆ ...
என்னில் எனதாய் நானே இல்லை ...
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே..!!

உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ ...
இது நான் காணும் கனவோ நிஜமோ


அன்பே உயிராய் தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்.!
உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்..!!

விடியும் வரை கனவின் நிலை உனதாய்
இங்கே தினம் ஏங்குதே..
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில் ..

உயிரை தொலைத்தேன் உன்னில் நானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் மனமே
வேண்டும் எனக்கே மனமே மனமே
விழியில் விழுந்தால் ..ஆ ஆ ...
என்னில் எனதாய் நானே இல்லை
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே

நினைத்தால் இனிக்கும் இளமை நதியே ..
உன்னோடு நான் மூழ்கினேன்.
தேடாத நிலையில் நோகாத வழியில்
கண்பார்க்கும் இடமெங்கும் நீதான் ..

விடியும் வரை கனவின் நிலை உனதாய்
இங்கே தினம் ஏங்குதே ..
மனம் உருகிடும் நிலை இது எந்தன்
முதல் முதல் வரும் உயிர் காதலில் . .


உயிரை தொலைத்தேன் உன்னில் தானோ ..
இது நான் காணும் கனவோ நிஜமோ ..
மீண்டும் உன்னை காணும் மனமே ..
வேண்டும் எனக்கே மனமே மனமே .!!

Sunday, August 23, 2009

ம்.. ம்...

இது நோயா ?

என்
வைற்றுக்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்
இது என்ன
காதலா..?
பன்றி காய்ச்சலா..?





ஐரோப்பிய நாணம்

என்னோடு பேசிய வேளையிலே,
வெட்கம் தாளாது சிரித்தது
பால்நிலா...
மெழுகுவத்தி வெளிச்சத்தில்..!!





சிற்பம்

காதலும் சிற்பமும்
ஒன்று போல..!
நீ சிரிக்கும் பொது
நான் சில்லாய் சிதருகின்றேன் ..!!
நீ என்னுள்ளே
காதலை செதுக்குகின்றாயோ?