Sunday, November 29, 2009

..உலகிற்கு அமைதி வேண்டி..




இந்த உலகம் எதற்கு ?
பால் பொழியும் வெண்ணிலவும்,
சுட்டெரிக்கும் சூரியனும்,
மின்னும் நட்சத்திரமும்
யாருக்காகப் படைக்கப்பட்டது ?
மனிதர் என்ற ஒப்பற்ற ஜீவன்கள் இன்பமாக வாழத் தானே!
பின்பு ஏன் இந்த பிளவு படுத்தும் எல்லை கோடுகள்?
உடைந்து போகின்றனவே இதயங்கள்,
யார் இதை தைப்பது?


கண்ணீர், காயம், இரத்தம், வலி எல்லோருக்கும் ஒன்று தானே.
எல்லாரும் வந்தது கருவறையில் இருந்துதானே ?
அவர் வலி கண்டு இவர் சிரிப்பது ஏன்?
அவர் வலி என் வலி என்று எண்ணி
இவர் கண்கள் ஈரமாக வேண்டாமா?


இதயங்களுக்குள் இடைவெளி வேண்டாம், தீவிரவாதம் வேண்டாம்,
சாதி, மதம், மொழி, கொள்கை என்ற பெயர்களில் வேற்றுமையைப் புகுத்தாதீர்கள்.
நாட்களை மகிழ்ச்சியாக்கி, அன்பும் பாசமும் கொண்டு வாழ்கையை வாழுங்கள்.
மக்களை உயர்வாக எண்ணி அன்பு பாராட்டுங்கள்.


எதிர்கால சந்ததியினர்களுக்கு போர், தீவிரவாதம் என்ற சொற்களை
அன்பும், பாசமும் வென்று விட்டது என்ற புதியதோர் பாடம் புகட்டுங்கள்.